அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்...!!
தினம் ஒரு திருத்தலம்... உக்கிர நிலையில் சிவன்... தினந்தோறும் அன்னாபிஷேகம்...!! அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்...!! https://chat.whatsapp.com/I4YqxWuLJH0Ai0cPRGx6S1 அமைவிடம் : நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள முக்கிய அம்சமான நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை தரிசிப்பது முக்கியமாகும். இது ஸ்ரீகண்டேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானுக்கான கோயிலான இக்கோயில் திராவிட சிற்பக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. புராணக்கதைகளின்படி யுகம் யுகமாக சிவபெருமான் இந்த திருத்தலத்தில் உறைவதாக நம்பப்படுகிறது. மாவட்டம் : அருள்மிகு ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம். எப்படி செல்வது? பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் எளிதில் அடையும்படியாக இத்தலம் அமைந்துள்ளது. கோயில் சிறப்பு : இந்தக் கோவிலில் இருக்கும் வீரபத்திரர் சுவாமி மிகவும் புகழ்பெற்ற மூர்த்தியாக திகழ்கின்றார். இவரின் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு இவ...