Wednesday, September 01, 2010

Happy Krishna Jayanthi to one and all!

Happy Krishna Jayanthi to one and all!


Worldwide today is celebrated as Sri Krishna Janmastami. Let us celebrate this occasion to rejoice and celebrate our Lord Krishna. Here is a small song in Tamil that praises a lullaby for the kid Krishna and also makes a gesture for His awakening to the reinstating of Dharma in the world.


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ (2)

அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ  (ஆயர்பாடி...)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ (2)
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி...)

நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ (2)
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி...)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ (2)

அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

No comments: