ஆண்டாளின் புகழ் பாடுவோம்

மண்மீது மதலையாய் வந்துதித்து
நாட்டை ஆளும் மன்னனிடம்
அண்ட சராசரங்களை ஆளும் மகேசன் மாதவன்
புகழ்பாடி பொற்கிழி பெற்ற
பெரியாழ்வாரின் புத்திரியாய்
வந்துதித்தவள் கோதை

விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து
 மாதவனை அறியாது
 அறியாமையில் மூழ்கி
 மீண்டும் மண்ணுக்கே போகும்
 மானிடர்களை வாழ்விக்கவந்த
கருணை தெய்வம் கோதை

யசோதை செய்த மாதவத்தால்
 யாதவனாக இப்புவியில் வந்துதித்து
பிறவிப் பிணிக்கு மருந்து தந்த
 தன்வந்திரி பகவான் மாதவனின் பெருமைதனை
மறந்துபோன  நம் போன்ற உயிர்க்கெல்லாம்
மீண்டும் காட்டி தந்தவள் கோதை

வேதம் கற்றோர் வேதத்தின்
 உண்மைப் பொருளறியாது
வாதம் செய்து கொண்டிருந்தனர்

அறிந்த சிலரும் அதை சக மானிடர்கள்
கடைத்தேற உபதேசிக்க மனமில்லாது
இருந்த நிலையில்
 வேதத்தின் விழுப்பொருளை
 பாமரனும் அறியும்வண்ணம்
அழகு தமிழில் பாடித் தந்தாள்
ஆண்டாள் என்னும் கோதை

மார்கழி மாதந்தன்னை
மாதவனைவணங்கி
மகிழ்ந்து மாளாப் பிறவியை அறுக்கும் மாதம்
 என்று அனைவருக்கும் உணர்த்தி
 மனித குலத்திற்கு நல்லதோர்
வழியைக் காட்டியவள்
 மண் மடந்தையாம் கோதை.


அமரரும் அறியா ஹரியின் பாதத்தை
அறியும் வழியைக் அனைவருக்கும் காட்டித் தந்தவள்
கோதை



அடங்கா மனதை அரங்கனின்
திருவடிகளில் அடங்கும்
திறத்தை கற்பித்தவள். கோதை

மண் மீது உதித்தவள்
. மண்ணை உண்ட மாவாயனின்
 புகழைப் பாடியவள் கோதை



திருமாலையே நெஞ்சில் நினைந்து
பூமாலை சாற்றிக்கொண்டு
அரங்கனின் மீது பாமாலை சாற்றி அருளிய
ஆண்டாளின் புகழ் பாடுவோம்
பிறரை இகழும் சொற்களை விடுத்து.

இவ்வுலக மோகம் கொண்டு
பதராய் அங்குமிங்கும் வீணே திரிந்து
இவ்வுலகில் வாழ்வை வீணாக்காமல்
 பக்தராய்  பரமனின் புகழை பாடிக்கொண்டு
பண்போடும் அன்போடும் ஆனந்தமாய் வாழ்வோம்.



அவனையே நினைந்து உருகி
அவனையே  மணாளனாக வரித்த
 மாண்புடையவளை என்றென்றும் மனதில் சிந்திப்போம்

அவள் காட்டிய வழியில் சென்று
அரங்கனின் திருவடி நிழலில்
என்றும் அழியா பதம் பெறுவோம்.



ஆண்டாள் திருவடிகளே சரணம்

Comments

Popular posts from this blog

The 48-Day Ayyappa Vratham: A Personal Guide to Spiritual Alignment

Sloka of Spiritual Compassion: Arindhum Ariyamalum

Nemili Bala Tripura Sundari Peetam: Where the Divine Dwells as a Child