Befitting Response for Atheists by Thirumurugu Kripanandavariar Swamigal

"திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” on #Whatsapp by #Athiests

வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்.  அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர்.

 இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள்
திருநீறு இட்டார் கெட்டார்..
திருநீறு இடாதார் வாழ்ந்தார்
என்று எழுதி இருந்தார்கள்.

உடன் வந்தவர், “காலம் கெடட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார்.

அதற்கு வாரியார், “இல்லை... சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார்.

“சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?”, என்றார்.

அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார்.

“திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும்.... அடுத்தது,

“திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) யார் வாழ்ந்தார்” என்றும் சொன்னார்.

அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை. 🙏

Comments

Popular posts from this blog

The 48-Day Ayyappa Vratham: A Personal Guide to Spiritual Alignment

Sloka of Spiritual Compassion: Arindhum Ariyamalum

Nemili Bala Tripura Sundari Peetam: Where the Divine Dwells as a Child