Posts

Showing posts from October, 2022

ஸ்ரீசரஸ்வதி அஷ்டோத்திர சத நாமாவளி

  ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் மஹா பத்ராயை நம: ஓம் மஹா மாயாயை நம: ஓம் வரப்ரதாயை நம: ஓம் ஸ்ரீ ப்ரதாயை நம: ஓம் பத்ம நிலயாயை நம: ஓம் பத்மாக்ஷ்யை நம: ஓம் பத்மவக்த்ரகாயை நம: ஓம் சிவாநுஜாயை நம: ஓம் புஸ்தகப்ருதே நம: (10) ஓம் ஜ்ஞாநமுத்ராயை நம: ஓம் ரமாயை நம: ஓம் பராயை நம: ஓம் காமரூபாயை நம: ஓம் மஹா வித்யாயை நம: ஓம் மஹாபாதக நாசிந்யை நம: ஓம் மஹாச்ரயாயை நம: ஓம் மாலிந்யை நம: ஓம் மஹோ போகாயை நம: ஓம் மஹா புஜாயை நம:  (20) ஓம் மஹா பாகாயை நம: ஓம் மஹாத்ஸாஹாயை நம: ஓம் திவ்யாங்காயை நம: ஓம் ஸுரவந்தி தாயை நம: ஓம் மஹா காள்யை நம: ஓம் மஹா பாசாயை நம: ஓம் மஹா காராயை நம: ஓம் மஹாங்குசாயை நம: ஓம் சீதாயை நம: ஓம் விமலாயை நம: (30) ஓம் விச்வாயை நம: ஓம் வித்யுந் மாலாயை நம: ஓம் வைஷ்ணவ்யை நம: ஓம் சந்த்ரிகாயை நம: ஓம் சந்த்ரவதநாயை நம: ஓம் சந்த்ரலேகா விபூஷி தாயை நம: ஓம் ஸாவித்ர்யை நம: ஓம் ஸுரஸாயை நம: ஓம் தேவ்யை நம: ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம: (40) ஓம் வாக் தேவ்யை நம: ஓம் வஸுதாயை நம: ஓம் தீவ்ராயை நம:...

துர்காஷ்டமி வழிபாடும் அதன் பலன்களும் !

துர்காஷ்டமி தினத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நவராத்திரியின் போது துர்க்கா,லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும். நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும். துர்காஷ்டமி என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம் புரட்டாசி மாதம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மறுநாள் வரும் நவமி, மகா நவமியாகப் போற்றப்படுகிறது. துர்கையை வழிபட ஏற்ற தினம் துர்காஷ்டமியாகும். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை அல்லது அரண் என்று பொருள். அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாக்கிறாள். இன்று மாலையில் துர்கையாக பாவித்து அனைத்த...

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு. 2. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு. 3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு. 4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு. 5. ஆஞ்சநேயர...

ஸ்ரீ துர்க்கா அஷ்டமி ஸ்பெஷல் :: ³ துர்கா³ அஷ்டோத்தர ஶத நாமாவளி ³

ஓம் து³ர்கா³யை நம: ஓம் ஶிவாயை நம: ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: ஓம் மஹாகௌ³ர்யை நம: ஓம் சண்டி³காயை நம: ஓம் ஸர்வஜ்ஞாயை நம: ஓம் ஸர்வாலோகேஶாயை நம: ஓம் ஸர்வகர்மப²லப்ரதா³யை நம: ஓம் ஸர்வதீர்த⁴மய்யை நம: ஓம் புண்யாயை நம: (1௦) ஓம் தே³வயோனயே நம: ஓம் அயோனிஜாயை நம: ஓம் பூ⁴மிஜாயை நம: ஓம் நிர்கு³ணாயை நம: ஓம் ஆதா⁴ரஶக்த்யை நம: ஓம் அனீஶ்வர்யை நம: ஓம் நிர்கு³ணாயை நம: ஓம் நிரஹங்காராயை நம: ஓம் ஸர்வக³ர்வ விமர்தி³ன்யை நம: ஓம் ஸர்வலோகப்ரியாயை நம: (2௦) ஓம் வாண்யை நம: ஓம் ஸர்வவித்³யாதி⁴ தே³வதாயை நம: ஓம் பார்வத்யை நம: ஓம் தே³வமாத்ரே நம: ஓம் வனீஶாயை நம: ஓம் வின்த்⁴யவாஸின்யை நம: ஓம் தேஜோவத்யை நம: ஓம் மஹாமாத்ரே நம: ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபா⁴யை நம: ஓம் தே³வதாயை நம: (3௦) ஓம் வஹ்னிரூபாயை நம: ஓம் ஸதேஜஸே நம: ஓம் வர்ணரூபிண்யை நம: ஓம் கு³ணாஶ்ரயாயை நம: ஓம் கு³ணமத்⁴யாயை நம: ஓம் கு³ணத்ரய விவர்ஜிதாயை நம: ஓம் கர்மஜ்ஞானப்ரதா³யை நம: ஓம் கான்தாயை நம: ஓம் ஸர்...

சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?

  மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ...