மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும்.
இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள். லட்சுமி, பார்வதி தேவியர் பல்வேறு வண்ணங்களில் புடவை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் ஏன் தெரியுமா?
சரஸ்வதி ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே பணிவும் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் படாடோபமாய் ஆடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும்
அறிஞரைப் பார்த்ததும் இருப்பவர் அனைவரும் வரவேற்று மரியாதை செய்வர். கல்வி கற்றவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்பதை உணர்த்தவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். கலைமகள் பெயர்க்காரணம்: சரஸ்வதியை கலைமகள் என்கிறார்கள். கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும். அதற்கு கரையில்லை. தன் வாழ்நாளுக்குள், ஒருவன் எல்லாக்கலைகளையும் கற்று விட முடியாது. இதைத்தான் கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பர். சிவனைப் போல, சரஸ்வதியின் தலையிலும் மூன்றாம் பிறை சந்திரன் உள்ளது. சகலகலாவல்லியான அவளே மூன்றாம் பிறை அளவுக்கு தான் தனக்கு கலைகள் தெரியும் என்று அடக்கத்துடன் காட்டுகிறாள்.
கூட்டாக வீணை இசைப்பது ஏன்?
நவராத்திரி காலத்தில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று நாட்களும், கோயில்களிலும், வீடுகளிலும் கூட்டாக வீணை இசைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் தெரியுமா? நவரத்னமாலா என்ற ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில் வீணை இருக்கிறது என்று பாடியுள்ளார். அவளை சிவனின் பத்தினி என்றும், அவள் சங்கீத இனிமையில் மூழ்கி அமைதியாகவும், மென்மையான உள்ளம் பெற்றவளாக இருப்பதாகவும் கூறுகிறாள். பராசக்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கும்போது, அவளை சியாமளா என்று அழைப்பர். இன்னிசையில் மூழ்கி ஆனந்தமாய் இருக்கும் அவளை, அதே இன்னிசையால் பக்தர்களும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்போது, அந்த இடத்தில் இருக்கும் எல்லார் மனமும் அமைதிபெறும். அதனால் தான், நவராத்திரியின் போது, கூட்டாக வீணை வாசிக்கிறார்கள். அமைதியைத் தேடி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நவராத்திரி காலத்தில் வழக்கத்தை விட அதிகமான மனஅமைதி கிடைக்கிறது.
Information Credits: Whatsapp
No comments:
Post a Comment