Monday, October 03, 2022

துர்காஷ்டமி வழிபாடும் அதன் பலன்களும் !


துர்காஷ்டமி தினத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நவராத்திரியின் போது துர்க்கா,லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும்.

நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும்.

துர்காஷ்டமி என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம்

புரட்டாசி மாதம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

மறுநாள் வரும் நவமி, மகா நவமியாகப் போற்றப்படுகிறது.

துர்கையை வழிபட ஏற்ற தினம் துர்காஷ்டமியாகும். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை அல்லது அரண் என்று பொருள்.

அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாக்கிறாள். இன்று மாலையில் துர்கையாக பாவித்து அனைத்து கோயில்களில் உள்ள  அம்பிகையை வணங்கலாம்.

கோயில்களில் துர்கையை எலுமிச்சம் பழ தோலில் தீபமேற்றி வழிபட துர்கையின் அருள் அரண்போல் காக்கும்.
துர்காஷ்டமி நாளில், ராகுகால வேளையில் ஆலயங்களில் உள்ள துர்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் நமக்கு எல்லா சக்தியும் கிடைக்கும், திருஷ்டி போவது குறிப்பாக கண் திருஷ்டி, ஓமல் அதெல்லாம் போய்விடும்.

மேலும் சிலர் பில்லி, சூனியம் என்றெல்லாம் சொல்லுவாங்க அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் துர்காஷ்டமியில் துர்கையை வழிபாடு செய்வதால் போய்விடும்.

*இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டி கொலு வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுகின்றனர்.

இந்த துர்காஷ்டமி நாளில் துர்க்கையை வழிபட்டால் சிறப்பானது மற்ற நாட்களில் வழிபாடு செய்கின்றோமோ இல்லையோ துர்காஷ்டமி அன்றைக்கு துர்கை வழிபாடு மிகவும் விசேசமானது.

குறிப்பாக, வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில் எட்டு வயது நிரம்பிய சிறுமிகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை அம்பிகையின் அம்சமாகவே பாவித்து வழிபட்டு, அவர்களுக்கு மங்கலப் பொருள்களை வழங்கினால், துர்கையின் அருளால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.


ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி

 

Information Credits: Whatsapp

No comments: